/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை ஒன்றியத்தில் வெள்ள பாதிப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
காணை ஒன்றியத்தில் வெள்ள பாதிப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காணை ஒன்றியத்தில் வெள்ள பாதிப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காணை ஒன்றியத்தில் வெள்ள பாதிப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : டிச 13, 2024 07:21 AM
விழுப்புரம்: காணை ஒன்றிய பகுதியில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை, கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக்சிரு நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், பெய்த கனமழையால், காணை ஒன்றியத்தில் வயலாமூர், கருங்காலிப்பட்டு, அகரம் சித்தாமூர், கெடார் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
சித்தாமூர் ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. நெற்பயிர்கள், சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் பாதித்தது.
அகரம் சித்தாமூர் ஏரி உடைப்பு காரணமாக காணைகுப்பம் - சூரப்பட்டு கிராமங்களுக்கான சாலை சேதமடைந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மூலம் 150 மீ., நீளத்திற்கு தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் குறுக்கே உள்ள மல்லிகைப்பட்டு மேம்பாலம் கடுமையாக சேதமடைந்தது.
தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள மல்லிகைப்பட்டு மேம்பாலத்தை அரசு முதன்மைச் செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, கலெக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதேபோல், மல்லிகைப்பட்டு மேம்பாலத்தின் கீழ் பகுதி சேதமடைந்தது. இங்கு, மணல் மூட்டைகள் மூலம், தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டுள்தையும், ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, காணை பி.டி.ஓ., சிவக்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.