/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 27, 2024 07:04 AM

விழுப்புரம்: விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கனிமொழி (விழுப்புரம்), யுவராஜ் (விக்கிரவாண்டி), நாராயணமூர்த்தி (வானுார்), செந்தில்குமார் (திருவெண்ணெய்நல்லுார்), கிருஷ்ணதாஸ் (கண்டாச்சிபுரம்), கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் உட்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், விவசாயிகள் தரப்பில் பிரதிநிதிகள் கூறியதவாது,
தானே புயல் பாதிப்பின் போது பாதித்த தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு சென்று சேராதது போல் இல்லாமல், தற்போது பாதித்துள்ள விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலட்டாறு மூலம் வெளியேறும் தண்ணீர் செல்லும் கிளை வாய்க்காலான நரியாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றாததால், தற்போது பெய்த மழையில் தண்ணீர் அரசமங்கலம், சேந்தனுார் கிராமங்களுக்குள் புகுந்து மக்கள் பாதித்தனர். இனியாவது, நரியாற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வானுார் தாலுகாவில், 32 குளங்கள் இருந்தாலும், பல ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற வேண்டும். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள், தங்களின் கரும்புகளை புதுச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கொண்டு செல்லும் நிலையுள்ளது. 120 கி.மீ., செல்ல வேண்டியுள்ளதால் இந்த விவசாயிகளின் கரும்பை அருகிலேயே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் முருகேசன், உங்களின் கோரிக்கை மனு மீது விரைவாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

