/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் தீபாவளி தள்ளுபடி
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் தீபாவளி தள்ளுபடி
ADDED : அக் 15, 2025 01:00 AM

விழுப்புரம் : தீபாவளி பண்டிகையை யொட்டி, விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் சிறப்பு தள்ளுபடியில் நகைகளை வாங்கி செல்ல பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
விழுப்புரம் காமராஜர் வீதியில், வாடிக்கையாளர்கள், கடந்த, 40 ஆண்டுகளாக, ஸ்ரீ வினோத் ஜூவல்லரி இயங்கி வருகிறது. இங்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தீபாவளி தள்ளுபடியில் நகைகள் விற்பனைக்கு உள்ளன.
கடந்த, 10ம் தேதி முதல் வரும், 21ம் தேதி வரை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகள், 916 ஹால்மார்க், 1 சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்; வெள்ளி நகைகளுக்கு, 1 கிலோவிற்கு, 6 ஆயிரம் ரூபாய், சிறப்பு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
மேலும், லட்சுமி குபேர சிறுசேமிப்பு திட்டம் இங்குள்ளது. இதில், ஆயிரம் ரூபாய் முதல், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம், 25 ஆயிரம் என, 11 மாதங்கள் பொதுமக்கள் சுலப தவணைகளை செலுத்தி நகை, வெள்ளி வாங்கி கொள்ளும் வசதி உள்ளது.
இந்த தங்க நகை சேமிப்பு திட்டத்தில், பொதுமக்கள் செலுத்தும் பணம், அன்றைய தேதியின் மதிப்பில் தங்கமாக வரவு வைக்கப்படுகிறது.
விலை உயர்ந்தாலும் கவலையில்லை. 916 கே.டி.எம்., ஹால்மார்க் நகைகளாக செய்கூலி, சேதாரம் இல்லாமல் பெற்று கொள்ளலாம்.
தவணை தொகையை, ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த திட்டத்தில் சேரும் அனைவருக்கும், 2வது மாதம் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
தீபாவளி சிறப்பு தள்ளுபடியையொட்டி, இந்த ஜூவல்லரியில் தங்க மற்றும் வெள்ளி நகையை
குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.