/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
/
தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
ADDED : அக் 31, 2024 05:27 AM

செஞ்சி: செஞ்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., தீபாவளி பரிசு வழங்கினார்.
செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., மஸ்தான் தீபாவளி பரிசு தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி, கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சங்கர், மகாலட்சுமி கமலநாதன், சிவக்குமார், அகிலா வேலு, சுமித்ரா சங்கர், துப்புரவு ஆய்வாளர் பார்கவி, தி.மு.க., நகர பொருளாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

