/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியது
/
கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியது
ADDED : அக் 02, 2024 02:10 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியது.
விற்பனையை கலெக்டர் பழனி நேற்று துவக்கி வைத்து ஆடைகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
கோ ஆப்டெக்சில், காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் தீபாவளி விற்பனை நடக்கிறது.
இந்த சிறப்பு விற்பனையில், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனத்தில் உற்பத்தி செய்த பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு புடவைகள், மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், காலடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளிக்கு, விழுப்புரத்திற்கு 70 லட்சம் ரூபாயும், திண்டிவனத்திற்கு 25 லட்சம் ரூபாயும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ ஆப்டெக்சின் கனவு நனவு திட்டத்தின்படி, மாத தவணைத் திட்டத்தில் 300 முதல் 3,000 ரூபாய் வரை 11 மாத தவணைகள் செலுத்தினால், 12வது தவணையை கோ ஆப்டெக்ஸ் செலுத்தி, கூடுதல் சேமிப்புடன் துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதமும், அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உள்ளதை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவ வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
மண்டல மேலாளர் சுப்ரமணியன், விற்பனை மேலாளர்கள் பார்வதி, ராம்குமார், வானதிதேவி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.