ADDED : மே 11, 2025 01:22 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில், மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிவண்ணன், அன்பு கிருஷ்ணன், ராஜேந்திரன், டிலைட் ஆரோக்கியராஜ், மன்னார், பஞ்சாட்சரம், ஊராட்சி தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி கதிரவன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் காசிமுத்து மாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார் சாதனை விளக்கி பேசினர்.
ஒன்றிய செயலாளர் விஜயராகவன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிவப்பிரகாசம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சுதா பாஸ்கரன், புஷ்பா சேகர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய கவுன்சிலர் முரளி நன்றி கூறினார்.
திண்டிவனம்
திண்டிவனம் அருகே மன்னார்சாமி கோவிலில், தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில், தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய சேர்மன் தயாளன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் மஸ்தான், பேச்சாளர் செங்கல்பட்டு சீனுவாசன் சிறப்புரையாற்றினர். மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் குமார், ராமமூர்த்தி, ரமேஷ், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.