/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 16, 2025 07:55 AM

செஞ்சி : பென்னகர் கிராமத்தில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
வல்லம் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ஏழுமலை, பெருமாள், ராஜலிங்கம், மணிமேகலை முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பிரபாகரன் வரவேற்றார்.
தலைமைக் கழக பேச்சாளர் சங்கர், மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் சாதனைகளை விளக்கி பேசி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, செழியன், மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், அணி நிர்வாகிகள் தமிழரசன், பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

