/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 11, 2025 01:31 AM

கோட்டக்குப்பம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோட்டக்குப்பத்தில் நடந்தது.
கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தி.மு.க., அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
தலைமை கழக பேச்சாளர் பம்மல் முகமது இப்ராஹிம், பேச்சாளர் ஜாஸ்மின் சுவேதா, தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜூ, மைதிலி ராஜேந்திரன், முரளி, ஒன்றிய சேர்மன்கள் வாசன், உஷா முரளி, துணை சேர்மன் பருவ கீர்த்தனா விநாயக மூர்த்தி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, கோட்டக்குப்பம் நகர் மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், மருத்துவ அணி துணை அமைப்பாளர் வினோ பாரதி, நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.