/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 13, 2025 12:42 AM
திருவெண்ணெய்நல்லூர் : மேலமங்கலத்தில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேலமங்கலம் கிராமத்தில், நடந்த பொதுகூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் வரவேற்றனர்.
ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நிர்மல்ராஜ், பேரூராட்சி துணை சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர்.
பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா சிறப்புரையாற்றினர்.
மாவட்ட பிரதிநிதிகள் சடகோபன், மோகன்ராஜ் மாதவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் காவிய வேந்தன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் தேவி செந்தில், சுரேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.