/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 11:05 PM

மயிலம்: மயிலம் தொகுதி மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் வீடூரில் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், பிரகாஷ், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். தலைமை பேச்சாளர்கள் ராஜேந்திர பிரசாத், அப்துல் வகாப் அதாபி அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், சேதுநாதன், தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், சங்கர், பொதுக்குழு உறுப்பினர் வீடூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயன், வீடூர் ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரி தமிழரசன், மயிலம் தொகுதி மருத்துவ அணி துணை அமைப்பாளர் பழனி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, மாவட்ட விவசாய அணி நெடி சுப்பிரமணி, வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய அவைத் தலைவர் பரசுராமன், முத்துவேல், கிளை செயலாளர்கள் ராஜா, பாலகிருஷ்ணன், பிரகாஷ், ருத்ர மூர்த்தி, தீர்த்தமலை, ஆறுமுகம் தங்கமணி, சிவமயம், பிரபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தர்ராஜன், ஆனந்தராஜ், ஆறுமுகம், ராகுல், அழகுவேல், கிருபாகரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக இளைஞர் அணி நவீன்குமார் நன்றி கூறினார்.