/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 15, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தழுதாளி கிராமத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மயிலம் ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவர் சேகர், தீர்மான குழு உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் அன்சாரி வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய பொருளாளர் பழனி, துணைச் செயலாளர்கள் செல்வகுமார், சின்னதுரை, சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.