/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2025 01:17 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்டம், கோலியனுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, கோலியனுார் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களை கண்டு, மற்ற மாநில அரசுகள் நடைமுறைபடுத்த முயன்று வருகிறது. அந்தளவுக்கு மக்களை பற்றியே சிந்தித்து திட்டங்களை வகுப்பவர் முதல்வர் என கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், ஒன்றிய துணை தலைவர் உதயகுமார், அவை தலைவர்கள் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கண்ணப்பன், துணை செயலாளர்கள் பட்டு ஆறுமுகம், ஞானவேல், ஜெயா பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் சொல்லின் செல்வம், தனசேகர், தேவி ரமேஷ், மோகனா பாலமுருகன், பிரசன்னா, சத்ய ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சிவக்குமார், தேனருவி,பட்டு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.