/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆதிதிராவிட நலக்குழு நிர்வாகிகள் ஆலோசனை
/
தி.மு.க., ஆதிதிராவிட நலக்குழு நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜன 24, 2025 06:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., ஆதிதிராவிட நலக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில ஆதிதிராவிட நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் பிரேம் வரவேற்றார். தலைவர் இருசப்பன், துணை தலைவர் வேலு, துணை அமைப்பாளர்கள் ராஜிவ்காந்தி, பழனி, ஏழுமலை, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி  பேசியதாவது,தி.மு.க.,வில் பொறுப்புக்கு வருவது சாதாரண விஷயமில்லை. நீங்கள் பொறுப்பிற்கு வந்துள்ளீர்கள். தி.மு.க., ஆட்சிக்கு நீங்கள் பெருமை, வலிமை சேர்த்திட வேண்டும். இந்த ஆதிதிராவிட நல  அணி, இளைஞரணிக்கு சமமாக செயல்பட்டு வருகிறது.
எல்லோரும் சமம் என திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்தி வருகின்றார்.  234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளோடு நாம் பணியாற்றி வெற்றிபெறவேண்டும்.  2026 தேர்தலில் வானுார் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும் எனப் பேசினார்.
கூட்டத்தில் வரும் 27, 28ம் தேதி முதல்வர் வரவுள்ளதை யொட்டி, அவருக்கு நாம் மிகப்பெரிய வரவேற்பை வழங்க வேண்டும்  என கூறினார். இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 27,28 ம் தேதிகளில் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு,  அமைச்சர் பொன்முடி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி  தலைமையில் தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

