sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி : செஞ்சி சிவா உறுதி

/

 தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி : செஞ்சி சிவா உறுதி

 தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி : செஞ்சி சிவா உறுதி

 தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி : செஞ்சி சிவா உறுதி


ADDED : ஜன 16, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழகத்தில் வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என கட்சியின் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா தெரிவித்தார்.

மயிலம் தொகுதியில், பல்வேறு கிராமங்களில் தி.மு.க., சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலவாரிய உறுப்பினரான செஞ்சி சிவா பேசுகையில், 'விழுப்புரத்தில், ரூ.4 கோடி மதிப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு ரூ.5.70 கோடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர், விழுப்புரம் மாவட்டத்திற்காக 11 புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். இதன்படி, மாவட்டத்தில் ரூ.424 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நான் மைலம் தொகுதி யில் மட்டும் ௭,௦௦௦ உறுப்பினர்களை சேர்த்து ௪,000 பேர் பயனடைந்துள்ளனர்.

இத்துடன் மடிக்கணினி வழங்கும் திட்டம், நான் முதல்வன் மற்றும் புதுமைப் பெண், மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை, கலைஞர் கனவு இல்லம், விடியல் பயணம், அன்புக் கரங்கள், இன்னுயிர் காப்போம், தமிழ் புதல்வன், தாயுமானவர் திட்டம், இல்லம் தேடி கல்வி, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசுத் திட்டங்கள் அனைத்தும் மக்களையும் சென்றடைவதற்காக, முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில், அரசு நலத்திட்டங்கள் மாவட்ட மக்களை முழுமையாக சென்றடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், 200 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us