/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:52 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியம், செஞ்சி, அனந்தபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள், டிஜிடல் ஏஜன்ட்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர்கள் ஆறுமுகம், வாசு, மணிவண்ணன், கல்யாண்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். செஞ்சி சட்ட சபை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயக்குமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தேர்தல் ஆணையம் நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தப் பணியின் போது தி.மு.க., நிர்வாகிகள் கவனமுடன் இருக்க வேண்டும்.
நிர்வாகிகள் பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பு தீவிர திருத்த பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலமைச்சரின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.
செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், பச்சையப்பன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி தலைவர்கள் செஞ்சி மொக்தியார் அலி, அனந்தபுரம் முருகன், துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன் பங்கேற்றனர்.
நகர செயலாளர் கார்திக் நன்றி கூறினார்.

