/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., பிரசாரம் துவக்கம்
/
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., பிரசாரம் துவக்கம்
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., பிரசாரம் துவக்கம்
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., பிரசாரம் துவக்கம்
ADDED : ஜூலை 08, 2025 11:16 PM

விழுப்புரம்; கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை மாவட்ட செயலாளர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.
மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம், வானுார் தொகுதிகளுக்குட்பட்ட, 569 வாக்கு சாவடிகளில், ஓரணியில் தமிழ்நாடு பிரசார களப்பணி துவங்கப்பட்டது.
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் மேற்கு ஒன்றியம், குமளம் ஊராட்சியில் நேற்று காலை பிரசாரத்தை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.
அங்குள்ள, 3 ஓட்டுச்சாவடிகளில் வீடு வீடாக குழுவினருடன் சென்று மக்களை சந்தித்து உரையாடினார். தொடர்ந்து கட்சியினர் பிரசாரம் மற்றும் உறுப்பினர் களப்பணியை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், அவை தலைவர் கண்ணப்பன், மாவட்ட வர்த்தக அணி வெங்கடேசன், கவுன்சிலர்கள் மணி, தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், பிடாகம் ராஜா, முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, கிளை செயலாளர் முருகன், குமுரன், முத்தமிழ், பக்தவச்சலம், அண்ணாமலை, மோகன், முருகன், ராம், ஜனா உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, கெங்கராம்பாளையம் ஊராட்சியில் வீடு, வீடாக சென்று, கட்சி குழுவினருடன் பிரசாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அவை தலைவர் கண்ணப்பன், கவுன்சிலர் சிவரஞ்சனி ராஜாமணி, ஊராட்சி தலைவர் அய்யனார், கிளை செயலாளர்கள் பாலு, முத்துசாமி, வெங்கடேசன், வெங்கடாஜலபதி, தீர்த்தமலை, தயாளன், முருகன், கோட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.