ADDED : டிச 30, 2025 05:09 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கோலியனுார் தெற்கு ஒன்றியத்தில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை கூட்டம் நடந்தது.
கோலியனுார் தெற்கு ஒன்றியம், திருப்பாச்சனுார் கிராமத்தில் உள்ள பூத் எண் 178, 179ல் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தேர்தல் நெருங்கியுள்ளதால் கிராமங்களில் உள்ள நிர்வாகிகள் மக்களிடம் தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி திண்ணை பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், ஒன்றிய அவைத் தலைவர் தேவகிருஷ்ணன், துணைச் செயலாளர் கலியமூர்த்தி, வீரபத்திரன், பாலாஜி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன்.
ஊராட்சி தலைவர் சரவணன், கிளைச் செயலாளர் சதாசிவம், பாக முகவர்கள் ராஜகோபால், சத்யானந்தம், ராஜி, வேலாயுதம், கோவிந்தராஜ், பிரகாஷ், மணிகண்டன், மும்தாஜ், ஐயப்பன், சேஷா, ஆசைதம்பி, ஐயப்பன், சிவகுமார், இளையராணி, கிளை நிர்வாகிகள் தனசேகர், செந்தில், தட்சணாமூர்த்தி, ராமகிருஷ்ணன், லட்சுமணன், பாலாஜி, பக்ருதீன், சிவகுமார், ராஜேந்திரன், பழனிவேல், அய்யனார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

