ADDED : ஜன 10, 2026 07:05 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி பேரூராட்சி பாகம் எண்.236ல் நடந்த பரப்புரைக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி துவக்கி வைத்து, தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நகர செயலாளர் நைனா முகமது, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சித்ரா, நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன்.
நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சிவா, சைபுல்லா, மாணவரணி யுவராஜ், ஞானம், செல்வம், உதயநிதி பாலு, முருகன், இம்ரான், கவுன்சிலர்கள் ரமேஷ், சுதா, வீரவேல், சுபா, வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

