/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்
ADDED : ஜன 12, 2025 10:18 PM

விழுப்புரம்; தி.மு.க., அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை பிரசார கூட்டம், காணை ஒன்றியத்தில் நடைபெற்றது.
காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனுார், கோழிப்பட்டு, காங்கேயனுார் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி வரவேற்றார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன் முன்னிலை வகித்தனர். பேச்சாளர்கள் சரத்பாலா, முல்லைவேந்தன் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் தயாஇளந்திரையன், முருகன், கற்பகம், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், துணை சேர்மன் வீரராகவன், ஊராட்சித் தலைவர்கள் சிவசங்கர், சுந்தரி , நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் தேவபூஷ்ணம், சேட்டு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.