
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ஒன்றியம் போத்துவாய் ஊராட்சியில் தி.மு.க., சார்பில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பிரசாரக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி கதிரவன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
ஒன்றிய கவுன்சிலர் பூங்காவனம் ராமசாமி, ஊராட்சி தலைவர் ரங்கநாயகி குபேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஊராட்சி நிர்வாகிகள் குழந்தைவேலு, அண்ணாதுரை, ரவீந்தர், சாமிதுரை, தசவரதன், ராஜாமணி, ஏழுமலை பாண்டியன், அலெக்ஸ் பாண்டியன் பங்கேற்றனர்.

