/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் தி.மு.க., பிரசாரம்
/
விக்கிரவாண்டியில் தி.மு.க., பிரசாரம்
ADDED : ஜன 17, 2025 11:18 PM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
விக்கிரவாண்டி பஸ்நிலையம் எதிரே துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பிரசாரத்திற்கு நகர செயலாளர் நைனாமுகமது தலைமை தாங்கினார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நகர தலைவர் தண்டபாணி வரவேற்றார் .
தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, பேச்சாளர்கள் மணிவேலன்,ரேவதி ஆகியோர் பேசினர்.
இதில் மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம்,நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் திலகர்,சந்தானம், துணை செயலாளர்கள் சுரேஷ்குமார் ,பிரசாத் ,பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .
முடிவில் சித்ரா நன்றி கூறினார்.