ADDED : ஏப் 04, 2026 05:59 PM

மயிலம்: மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மயிலம் சட்டசபை தொகுதி வேட்பாளராக தே.மு.தி.க., மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க., - காங்., - வி.சி., - தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று, முன்னாள் அமைச்சர் மஸ்தான், ரவிக்குமார் எம்.பி., முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தி.மு.க., விழுப்புரம் மாவட்ட அவைத் தலைவர் சேகர், கம்யூ., கட்சி நிர்வாகி சுப்ரமணி, காங்., மாவட்ட தலைவர் ரங்கபூபதி, மயிலம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன், சேதுநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், கண்ணன், நிவேதிதா ஊராட்சி தலைவர்கள் முருகன், பிரகாஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
