/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., இன்று அவசர செயற்குழு மாவட்ட பொறுப்பாளர் 'அழைப்பு'

ADDED : மே 06, 2025 05:22 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் இன்று (6ம் தேதி) அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை;
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் இன்று (6ம் தேதி) காலை 10.00 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கத்தில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார்.
இந்திய நாட்டிற்கே முன்மாதிரி முதல்வராக உள்ள ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தல், தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகளை மாவட்டம் முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல, சாதனை விளக்க கூட்டங்கள் நடத்துவது, வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.