/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எதிர்கட்சிகளுக்கு பதில் கூறும் பொதுக்கூட்டம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் பேட்டி

ADDED : செப் 14, 2025 11:19 PM

விழுப்புரம்: 'விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி நடக்கும் ஓரணியில் தமிழகம் தீர்மான பொதுக்கூட்டம் எதிர்கட்சிகளுக்கு பதில் கூறும் வகையில் இருக்கும்' என மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறினார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
ஜூலை மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழகம் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். விழுப்புரம் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 9, வானுார் தொகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 639 உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம்.
இன்று 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பூத் அளவில் உறுதிமொழி கூட்டம் நடக்கிறது. விழுப்புரம் தொகுதியில் 291 பூத்களிலும், விக்கிரவாண்டி தொகுதியில் 278 பூத்களிலும் உறுதிமொழி எடுக்கிறோம்.
வரும் 17ம் தேதி கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் மத்திய மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்க உள்ளோம். வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் ஓரணியில் தமிழகம் தீர்மான பொதுக்கூட்டம் நடக்கிறது. அங்கு எடப்பாடி பழனிசாமி, விஜய், அன்புமணி வந்து சென்று விட்டனர். எனவே, இந்த பொதுக்கூட்டம் எதிர்கட்சிகளுக்கு பதில் கூறும் கூட்டமாக இருக்கும்.
இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய அவைத் தலைவர் கண்ணப்பன், பேரூராட்சி செயலாளர் ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.