ADDED : மார் 18, 2024 06:01 AM

செஞ்சி, :  ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட செஞ்சி, மயிலம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த தி.மு.க., பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடந்தது.
மாவட்ட அவைத் தலை வர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி மேற்பார்வையாளர்கள் செஞ்சி அன்பழகன், மயிலம் ஜெரால்டு முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் சீனிராஜ், பொதுக்குழு  உறுப்பினர்கள் மணிவண்ணன், சாந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன்.
பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ராஜாராமன், மணிமாறன், செழியன், செஞ்சி ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி தலைவர் கள் செஞ்சி சேர்மன் மொக்தியார், அனந்தபுரம் முருகன், நகர செயலாளர்கள் செஞ்சி கார்த்திக், அனந்தபுரம் சம்பத் மற்றும் பூத் முகவர்கள் பங்கேற்றனர்.

