ADDED : டிச 22, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
காங்., கமிட்டி தலைவர் சீனுவாசகுமார், வி.சி., பெரியார், கம்யூ., சவுரிராஜன், சுப்ரமணியன், ம.தி.மு.க., பாபு கோவிந்தராஜ், த.வா.க., பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் தேவா, மனிதநேய மக்கள் கட்சி முகமது ஜக்ரீயா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுல்தான் மொய்தீன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் நிர்வாகிகள் வெற்றிக்காகன யுக்திகள், தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

