/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
/
பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
ADDED : ஜன 12, 2024 11:25 PM

திண்டிவனம்: ஒலக்கூர் பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஒலக்கூர் ஒன்றிய கூட்டம் நேற்று ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.
துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் தேவதாஸ் (கிராம ஊராட்சி), நாராயணன், மேலாளர் ஏகாம்பரம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கிய உடன் ஒன்றிய சேர்மன் கேட்ட கேள்விக்கு, பி.டி.ஓ.,தேவதாஸ் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். தமிழில் பதில் கூறுங்கள் என சேர்மன் கூறினார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்களும், தமிழில் பதில் அளிக்க வலியுறுத்தினர். மேலும், ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை சேர்மன் பார்வைக்கு கொண்டு வருவதில்லை என சேர்மன் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து ஒன்றியத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.ஜி.,பணிக்கான ஒப்பந்தங்களை ஒன்றிய சேர்மன் கவனத்திற்கு கொண்டு வராமல் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கியது குறித்து பி.டி.ஓ., தேவதாசிடம் சேர்மன் கேட்டதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பி.டி.ஓ.,வை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் அண்ணாதுரை தலைமையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அதனையடுத்து, வரும் காலங்களில் அனைத்து நடவடிக்கைகளையும் சேர்மன் கவனத்திற்கு கொண்டு வருவதாக பி.டி.ஓ., தெரிவித்ததன் பேரில், தர்ணா விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின் கூட்டம் நடந்தது.