/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிகாரிகளுக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எச்சரிக்கை
/
அதிகாரிகளுக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எச்சரிக்கை
ADDED : மார் 19, 2024 10:48 PM
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது, மணவாளன் உள்ளிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில், '42 வார்டுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாகவே அடிப்படை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்த இடங்களில் சாலை சீரமைக்காமல் கிடக்கிறது.
தெரு மின் விளக்குகள் எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்ற டெண்டர் விட்டு ஓராண்டுக்குப் பிறகு இப்போதுதான் வார்டுக்கு 10 லைட் மாற்றுகின்றனர். பல இடங்களில் இருளில் மூழ்கியுள்ளது.
இந்த தேர்தலுக்கு எப்படி ஓட்டு கேட்க முடியும். நகராட்சி அலுவர்கள், ஒப்பந்தாரர்களின் அலட்சியத்தால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைந்தால், நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்' என நகராட்சி அலுவலர்களை எச்சரித்தனர்.
இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'இந்த ஆட்சியின் அவலத்தை ஆளும் கட்சி கவுன்சிலர்களே அரை மணி நேரமாக குற்றம் சாட்டி விளக்கி விட்டனர். இதுவே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை' என்றனர்.

