/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்
/
தி.மு.க., பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : நவ 03, 2024 04:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகர தி.மு.க., சார்பில், வட்ட நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம், கீழ்பெரும் பாக்கம், எருமணந்தாங்கல், ஆசிரியர் நகர், பானாம்பட்டு பாதை, கிழக்கு சண்முகபுரம் காலனி, நகர தி.மு.க., அலுவலகம், வி.மருதுார், கந்தசாமி லே-அவுட், ரங்கநாதன் ரோடு, சாலாமேடு பகுதிகளில், கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, விழுப்புரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தலைமை தாங்கினார். மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை முன்னிலை வகித்தனர்.
நகர பொருளாளர் இளங்கோ, துணைச் செயலாளர் புருேஷாத்தமன், வார்டு செயலாளர்கள் வைத்தியநாதன், குமரன், ஏழுமலை, ராஜா, வீரநாதன், மணவாளன், செல்லையன், மணிவண்ணன், சண்முகம், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ்பாபு, விஜயகுமார், செந்தில்முருகன், பிரபாகரன், ேஷக் சையது அமீது, சண்முக சுந்தரம், ரமேஷ், சுமோ முருகன், சுந்தர், தங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.