/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 07, 2024 08:12 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெஞ்சல் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருணாகரன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கனமழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கும், மகசூல் பாதித்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் தராத தமிழக அரசை கண்டித்தும், பாதித்த குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தால், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.