/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : ஆக 04, 2025 11:07 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க.., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பிரதீப் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன் வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனி, ரவிச்சந்திரன், பொறியாளர் அணி சக்தி சரவணன், வெங்கடேசபெருமாள், ரசூர்பாஷா, அயலக அணி முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர பொறியாளர் அணி அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.