/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாளை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
/
நாளை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
நாளை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
நாளை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
ADDED : நவ 21, 2025 05:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நாளை நடக்கிறது.
மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாளை 22ம் தேதி காலை 9:30 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன், வானுார் தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், வரும் 27ம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.