ADDED : மார் 05, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி கோலியனுார் ஒன்றிய கிராமங்களில் தி.மு.க., சார்பில் திண்ணைப் பிரசாரம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த ஏ.கே.குச்சிப்பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, வீடுகள் தோறும் தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, அற்பிசம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் வழங்கி அரசின் சாதனைகளை விளக்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், தெய்வசிகாமணி, பிரபாகரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய அவைத் தலைவர்கள் தேவகிருஷ்ணன், வழக்கறிஞர் கண்ணப்பன், மாவட்ட பிரதிநிதி சடகோபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

