ADDED : ஜன 29, 2024 06:21 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது.
புதிய பஸ் நிலைய நகராட்சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் வரவேற்றார். நகர செயலாளர் சர்க்கரை முன்னிலை வகித்தார்.
தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் நடிகர் சந்திரசேகர், தலைமைக் கழக பேச்சாளர் அன்னவயல் கணேசன் சிறப்புரையாற்றினர். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட அணி இணைச் செயலாளர் புஷ்பராஜ், விவசாய தொழிலாளர் அணி சிவா, மாவட்ட துணைச் செயலர்கள் முருகன், இளந்திரையன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், மாநில மகளிரணி தேன்மொழி வாழ்த்திப் பேசினர்.
மாணவரணி நிர்வாகிகள் மணிகண்டன், புருஷோத்தமன், லெனின் விஜய், குணசேகரன், அறிவழகன், பிரபு, அசாருதின், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
பஸ் நிலையம் எதிரே தி.மு.க., சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி ,ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நைனா முகமது வரவேற்றார்.
தலைமைக்கழக பேச்சாளர் கோவை சம்பத், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், நகர தலைவர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி
அப்பம்பட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். மேல்மலையனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் துவக்க உரையாற்றினார்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஞானசேகரன், பெனாசிர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தலைமை கழக பேச்சாளர் உடுமலை தாமரை சிவா ஆகியோர் பேசினர்.
ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.