ADDED : பிப் 16, 2026 06:52 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி பனையபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், ராஜ், ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், மும்மூர்த்தி. நகர செயலாளர் நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தொகுதி பார்வையாளர்கள் ஜெயராஜ், கார்த்திகேயன், வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிர் அணி பிரசார செயலாளர் தேன்மொழி. ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைசெல்வி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், சிவக்குமார், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன்.
மாவட்ட அமைப்பாளர்கள் கணேசன், அருள்மொழி, சூர்யா, ராஜசேகர், சாம்பசிவம், மாவட்ட பிரதிநிதிகள் முரளி, சுதாகர், வேல்முருகன், இளைஞரணி பாலகிருஷ்ணன், பாரதி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
