/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசு பூச்சாண்டி காட்டி ஏமாற்றுகிறது: இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன் 'காட்டம்'

ADDED : ஜன 15, 2026 08:20 AM

விழுப்புரம்: தி.மு.க., அரசு, பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டல செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, பொருளாளர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டகளும் செயல்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அனைத்து துறைகளிலும் பின்னடைவு தான் உள்ளது.
தென்னிந்தியாவில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை தமிழகத்தில் தான் அதிகமாக நடக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கக் கூடாது என்று அரசு மறைமுகமாக தடுக்கிறது.
தி.மு.க., அரசு எதுவும் செய்யாமல், செய்ததாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றி வருகின்றது. இந்த ஆட்சி மாற வேண்டும். கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். அ.தி.மு.க.,விற்கு லோக் சபா தேர்தலில் ஆதரவு கொடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.