/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனை
/
தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனை
ADDED : ஆக 06, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வழக்கறிஞர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சுதாகர் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகம், வழக்கறிஞர் அணி உறுப்பினர் அட்டை, நான்காண்டு சாதனை புத்தகத்தை வழங்கி பேசினார். வழக்கறிஞர்கள் மணிவண்ணன், சுப்ரமணியன், அரிகிருஷ்ணன், ராஜேந்திரன், சீனிவாசன், பிரவீன், தமிழ்செல்வி கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.