UPDATED : நவ 19, 2026 05:10 PM
ADDED : நவ 19, 2026 04:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாளை மறுதினம் (நவ.21)நடக்கிறது.
இது குறித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், மத்திய மாவட்ட பொறுப்பாளராகிய எனது தலைமையில், நாளை மறுதினம் மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கத்தில் நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், தலைவர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியின், 50வது பிறந்தநாள் விழாவை, மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
