ADDED : நவ 27, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த முகாமை மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி துவக்கி வைத்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., ரத்த தானம் வழங்கினார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் வாழ்த்திப் பேசினர். முகாமில் 100க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், ராஜா, பிராபகரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.