/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வரை வரவேற்க தி.மு.க.,வினருக்கு அழைப்பு
/
முதல்வரை வரவேற்க தி.மு.க.,வினருக்கு அழைப்பு
ADDED : ஜன 26, 2025 05:44 AM

திண்டிவனம்: திண்டிவனத்திற்கு நாளை வருகை தரும், தமிழக முதல்வரை வரவேற்க தி.மு.க.,வினருக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் கட்சி மற்றும் அரசு விழாக்களில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தரும் முதல்வருக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனம்- சென்னை சாலையிலுள்ள ஆரியாஸ் ஓட்டல் எதிரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகின்றது.
பின்னர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு, விழா நடைபெறும் ஜே.வி.எஸ்.திருமண மண்டபம் வரை தி.மு.க.,வை சேர்ந்த அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

