/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
' புயல் நிவாரணம் வழங்குவதில் தி.மு.க.,வினர் தலையீடு கூடாது '
/
' புயல் நிவாரணம் வழங்குவதில் தி.மு.க.,வினர் தலையீடு கூடாது '
' புயல் நிவாரணம் வழங்குவதில் தி.மு.க.,வினர் தலையீடு கூடாது '
' புயல் நிவாரணம் வழங்குவதில் தி.மு.க.,வினர் தலையீடு கூடாது '
ADDED : டிச 04, 2024 08:13 AM

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அப்பம்பட்டு, கோணை, சக்கராபுரம் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சசிகலா நேற்று பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
செஞ்சி பகுதியில் 15 ஏக்கரில் ராஜா தேசிங்கு காலத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்கிய குளம் இப்போது இல்லை. ஏரி, குளங்கள் துார் வாராததால் வெள்ளம் ஏற்பட்டது.
தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் வேலை செய்யாமலே பில் போட்டு எடுத்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் போதுமானது இல்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தி.மு.க.,வினர் தலையிட கூடாது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா கூறினார்.