/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூலை 14, 2025 03:54 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர சேர்க்கும் பணி துவங்கியது.
விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் விக்கிரவாண்டி மத்திய, ஒன்றிய பகுதிகளான சின்னதச்சூர், ஆசூர் ஊராட்சிகளில் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், தொழிலாளர் அணி தலைவர் அரிகரன்.
நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, நகரஇளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுதா பாக்கியராஜ், வீரவேல் ,பொருளாளர் பாபுஜி பாண்டியன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பாலு, மாவட்ட நிர்வாகிகள் அசோக்குமார், சுதாகர், ராம்குமார், பாபுஜி யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.