/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஆக 08, 2025 02:03 AM

வானுார்: கிளியனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
வானுார் தொகுதிக்குட்பட்ட கிளியனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை, விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது, கிளியனுார் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் புஷ்பராஜ், ராஜூ, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, ஒன்றிய துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் வேலு, மாவட்ட பிரதிநிதிகள் தனபால் ராஜ், சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் கவுதம், தொண்டர் அணி தலைவர் ரகு, ஒன்றிய துணை செயலாளர் அழகேசன், ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தட்சணாமூர்த்தி, அழகேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், விஜயகுமார், வெங்கட், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரசாத், விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.