/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியை மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட, நகர 17வது வார்டு மகாராஜபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரசார பணி நடந்தது.
இதில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பங்கேற்று, வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். அப்போது, தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்ததோடு, புதிய உறுப்பினர்களை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.
விழுப்புரம் கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல், வார்டு செயலாளர் மணிவண்ணன், நகர்மன்ற கவுன்சிலர் ஜெயந்தி மணிவண்ணன், துணை செயலாளர் சக்திவேல், பிரதிநிதிகள் முருகன், பாவாடை, அவை தலைவர் கணேசன், கதிரவன், சரவணன், மாணிக்கம், மகளிரணி லதா முருகன், காமாட்சி, பொற்செல்வி, அர்ச்சனா, கோமதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, வளவனூர் பேரூராட்சி 1வது வார்டில், அவர் துவக்கி வைத்தார். பேரூராட்சி செயலாளர் ஜீவா, தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், வார்டு செயலாளர் ராம்குமார், கவுன்சிலர்கள் சசிகலா, வடிவேல், இளைஞரணி முருகன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் அவர் கோலியனுார் தெற்கு ஒன்றியம் வேளியம்பாக்கத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமையும் துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலர் முருகவேல், சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட பொறியாளரணி செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தினகரன், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், விவசாய அணி கேசவன், அவை தலைவர் கண்ணப்பன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.