/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்சிக்கு வந்ததும் திரும்பி பார்க்காத தி.மு.க., : விரக்தியில் மாவட்ட வி.சி., நிர்வாகிகள்
/
ஆட்சிக்கு வந்ததும் திரும்பி பார்க்காத தி.மு.க., : விரக்தியில் மாவட்ட வி.சி., நிர்வாகிகள்
ஆட்சிக்கு வந்ததும் திரும்பி பார்க்காத தி.மு.க., : விரக்தியில் மாவட்ட வி.சி., நிர்வாகிகள்
ஆட்சிக்கு வந்ததும் திரும்பி பார்க்காத தி.மு.க., : விரக்தியில் மாவட்ட வி.சி., நிர்வாகிகள்
ADDED : நவ 04, 2025 01:23 AM
த ர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வி.சி.கட்சியின் தலைவர் திருமாளவன் பேசுகையில்,  'தி.மு.க., நிர்வாகிகளின் களப்பணிக்கு ஈடாக வி.சி., நிர்வாகிகளும் உழைத்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் ஸ்டாலினை மீண்டும் அமர வைப்போம்'என்றார்.
மேலும்,  கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியைவிட, 2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணி பெறப்போகும் வெற்றிதான் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 234 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணிதான் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
இதையடுத்து,    விழுப்புரம் மாவட்ட வி.சி., முக்கிய பிரமுகர் சமூக வலைதளங்களில் 'சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம். ஆட்சியில் அமர வைத்த பிறகு வி.சி., கட்சியினரை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.
இப்போது எந்த நிலைமையில் நாம் இருக்கிறோமோ அதே நிலைமை தான் மீண்டும் நீடிக்கும். நிச்சயமாக 2026ல் தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்' என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதி திராவிடர் மக்களுக்கு நல திட்டங்கள் முறையாக சென்றடையவில்லை.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை, இதுவரையிலும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் தரப்பில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதில்லை.
ஜாதி கொடுமையால் படுகொலையான குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரையிலும், விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதா என்பதுகூட தெரியவில்லை.
ஆதி திராவிட மக்களுக்கு பட்டாக்கள், பெண்களுக்கு தையல் மெஷின் மற்றும் ஏராளமான நலத் திட்டங்கள் கேள்விக்குறியாக உள்ளது.
இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் வி.சி.க., தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

