ADDED : பிப் 09, 2026 04:22 AM

திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திண்டிவனம் தொகுதியில் முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
தொகுதியிலுள்ள கட்சி சாராத முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், வணிக பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று காலை திண்டிவனத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர் பேராசிரியர் சபாபதி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் கண்ணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், துணை சேர்மன் பழனி, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மரக்காணம் பகுதிக்கு சிப்காட் கொண்டு வரவேண்டும். பாலிடெக்னிக் கொண்டு வரவேண்டும், மகளிர் கல்லுாரி வேண்டும்.
பழங்குடி இருளர்களுக்கு தரமான வீடுகள் கட்டித்தர வேண்டும், திண்டிவனத்தில் நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.
