/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சரை வரவேற்க தி.மு.க.,வினர் போட்டி
/
அமைச்சரை வரவேற்க தி.மு.க.,வினர் போட்டி
ADDED : ஜன 30, 2024 06:34 AM
மாவட்ட தலைமை அரசு மருத்துவமைனயாக தரம் உயர்த்தப்பட்ட திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய நேற்று காலை திண்டிவனம் வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியனுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் 2 கோஷ்டிகளாக தனித்தனியாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் மஸ்தானை விட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் திண்டிவனம் நகராட்சியைச் சேர்ந்த 13 தி.மு.க., கவுன்சிலர் அணியினர், நேற்று காலை மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல் கேட்டில் முதலாவதாக அமைச்சர் சுப்ரமணியனுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இதில் கவுன்சிலர்கள் சின்னசாமி, ரேகா நந்தகுமார், பார்த்திபன், பரணிதரன், சரவணன், சத்தீஷ், பிர்லாசெல்வம் பங்கேற்றனர்.
இதற்கடுத்து, ஒலக்கூர் கூட்ரோட்டில் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு தி.மு.க.,வினர் தனித்தனியாக இரண்டு இடங்களில் வரவேற்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.