/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் வேலுக்கு மாவட்ட பொறுப்பு தி.மு.க.,வினர் விரக்தி
/
அமைச்சர் வேலுக்கு மாவட்ட பொறுப்பு தி.மு.க.,வினர் விரக்தி
அமைச்சர் வேலுக்கு மாவட்ட பொறுப்பு தி.மு.க.,வினர் விரக்தி
அமைச்சர் வேலுக்கு மாவட்ட பொறுப்பு தி.மு.க.,வினர் விரக்தி
ADDED : மே 13, 2025 12:57 AM
ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொன்முடி இருந்தார்.
சில மாதத்திற்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வேலு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட பொறுப்பை அமைச்சர் பொன்முடி தொடர்ந்தார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் அமைச்சரானதும், இரு அமைச்சர்களும் போட்டி போட்டுக்கு கொண்டு பணியாற்றினர்.
மஸ்தான் மீது புகார் எழுந்ததால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பொன்முடி மட்டும் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை கவனித்து வந்தார்.
பொன்முடியும் சர்ச்சை பேச்சில் சிக்கியதால், அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், கள்ளக்குறிச்சி உதயசூரியன் ஆகிய யாரேனும் அமைச்சர் பதவிக்கு வருவார்கள் என கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு மாவட்டத்திற்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சராக வேலு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கவனித்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன், விழுப்புரத்தையும் கூடுதலாக கவனிப்பார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 எம்.எல்.ஏ.,க்கள், கள்ளக்குறிச்சியில் 3 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், இரு மாவட்டங்களிலும் ஒருவரை அமைச்சராக நியமிக்காமல், கட்சி தலைமை பாரபட்சமாக செயல்படுவதாக கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூரில் அமைச்சர் இருந்தால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள முடியும். மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள், கோரிக்கைகள் முதல்வருடன் பேசி செயல்படுத்த வசதியாக இருக்கும். மாவட்டத்திற்கு உள்ளூர் நபருக்கு பொறுப்பு வழங்காததால், உட்கட்சி பிரச்னைகள் தீர்ப்பதற்கு கூட தலைமையின்றி தவிப்பதாக கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பின்தங்கிய 2 மாவட்டத்திற்கு, அதே மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தனி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.