ADDED : டிச 03, 2025 06:20 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி தி.மு.க., இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது.
திருக்கோவிலுாரில் நடந்த முகாமை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி துவக்கி வைத்தார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஊராட்சி துணை சேர்மன் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு, விசுவநாதன், லுாயிஸ், சடகோபன், தீனதயாளன், பேரூராட்சி செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, பாலாஜி, நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், நிர்மல்ராஜ், அய்யப்பன், புஷ்பராஜ், தினகரன், சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

