/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
/
கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
ADDED : ஆக 07, 2025 11:11 PM

செஞ்சி:செஞ்சி, அப்பம்பட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க., வினர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி கூட்ரோட்டிலும், செஞ்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் அப்பம்பட்டிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு செஞ்சியில், பஸ் நிலையத்தில் இருந்து கூட்ரோடு வரையிலும், அப்பம்பட்டில் கிராம எல்லையில் இருந்து பஸ் நிறுத்தம் வரையிலும், மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
பின்னர், கருணாநிதி படத்திற்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானம், பிரட், பிஸ்கட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, வழக்கறிஞர்கள் தமிழ்செல்வி கர்ணன், சந்திரன், சம்பத், தொண்டரணி பாஷா, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, அவைத்தலைவர்கள் ஆறுமுகம், வாசு, ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன், மாணவரணி பிரசன்னா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.